பல்கலைக்கழகங்களை விரைவில் திறக்கத் தீர்மானம்

🕔 September 18, 2021

ல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டு ‘டோஸ்’களையயு வழங்கி பல்கலைகழகங்களை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

சகல பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் கூறினார்.

30 வயதுக்கு குறைவான கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அந்தந்த மாவட்ட சுகாதார சேவைகள் மத்திய நிலையத்தினை தொடர்பு கொண்டு விரைவில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு சகல பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து பல்கலைகழக சுகாதார துறையினர் மற்றும் துணைவேந்தர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடி பல்கலைக்கழகங்களை மீள திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்