கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினுடன் தொடர்புடையவர் குறித்து தகவல் வெளியானது

🕔 September 1, 2021

ர்வதேச கடற்பரப்பின் ஊடாக நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட 230 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள், டுபாயில் தலைமறைவாகியுள்ள கொஸ்கொட சுஜி என்பவருடையது என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்களின் ஊடாக சநாட்டின் கடற்பரப்பிற்குள் குறித்த ஹெரோயின் அனுப்பப்பட்டது.

அத்துடன், இந்த ஹெரோயின் போதைப்பொருள், மாலைதீவு கடற்பகுதியில் வைத்து படகொன்றில் ஏற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து நேற்று முன்தினம் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், நாட்டுக்குள் கடத்தி வருவதற்கு முற்பட்ட 290 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய ஹெரோயினுடன் 05 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள், பலப்பிட்டிய, ஹபராதுவ, அங்ஹுன்கல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 37 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்