திருகோணமலை ‘கிறீன்’ வீதி சந்தியில், இரண்டு கைக்குண்டுகள் கண்டெடுப்பு

🕔 August 30, 2021

– பைஷல் இஸ்மாயில் –

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ‘கிறீன்’ வீதி (பசுமை வீதி) சந்தியில் – வடிகான் அருகே இரண்டு கைக்குண்டுகள் இன்று (30) இரவு கண்டெடுக்கப்பட்டதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர், கண்டெடுக்கப்பட்ட குண்டுகளை – நாளை செயலிழக்கச் செய்வர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments