பெண்ணின் நிர்வாணப் படத்தை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றப் போவதாகக் கூறி, பணம்கேட்டு மிரட்டியவர்கள் கைது

🕔 August 29, 2021

பெண்ணொருவரின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பொலனறுவை மற்றும் அங்கொட பகுதிகளிகளைச் சேர்ந்த 20 முதல் 23 வயதுக்குட்பட்ட ஆண்களாவர்.

எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இவர்கள் கைது செய்ப்பட்டனர்.

பேஸ்புக் மூலம் சந்தேகநபர்கள் – அந்தப் பெண்ணின் சம்பநதப்பட்ட புகைப்படங்களைச் சேகரித்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடம் இருந்த இரண்டு கணினிகள் மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஒஎம்பிலிப்பிட்டிய நீதவான் முன்னிலையில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Comments