நாலரைக் கோடி யோகட் கோப்பைகள் மாதாந்தம் சூழலில் சேர்கின்றன: சுகாதார அமைச்சு தகவல்

🕔 July 26, 2021

நாட்டில் வருடாந்தம் 96 தொடக்கம் 100 தொன் வரையான பிளாஸ்டிக் யோகட் வெற்றுக் கோப்பைகள் சுற்றாடலில் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

யோகட் கோப்பைகளை மீள் சுழற்சி செய்வது தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாவிக்கப்பட்ட யோகட் கோப்பைகளில் 07 வீதம் மாத்திரமே மீள் சுழற்சிக்காக பெற்றுக் கொள்ளப்படுகின்றன. ஏனைய 93 வீதமானவை சூழலில் கொட்டப்படுவதுடன் எரியூட்டப்படுகின்றன.

இதற்கமைய மாதாந்தம் 45 மில்லியன் பிளாஸ்டிக் யோகட் கோப்பைகள் மற்றும் அதற்கு ஒத்த பிளாஸ்டிக் கோப்பைகள் சூழலில் சேர்க்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்