சமையல் எரிவாயு: ஆகக்கூடிய சில்லறை விலை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

🕔 July 25, 2021

மையல் எரிவாயு 18 லீற்றர் (9.6 கிலோகிராம்) கொள்கலனின் ஆகக்கூடிய சில்லறை விலை 1,150 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று (25) முதல் அமுலாகும் வகையில் இந்த விலை நிர்ணயம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

எரிவாயு கொள்கலனின் ஆகக்கூடிய சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, சமையல் எரிவாயுவை மாவட்டங்களில் விற்பனை செய்யக்கூடிய ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து செலவுகளுக்கு உட்பட்டு, கொழும்பில் 1,150 ரூபாவுக்கும், அம்பாறையில் 1252 ரூபாவுக்கும், யாழ்ப்பாணத்தில் 1259 ரூபாவுக்கும் 18 லீற்றர் (9.6 கிலோகிராம்) கொள்கலனை விற்பனை செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்