தற்போதைய அரசாங்கம் 88000 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளது: சம்பிக்க குற்றச்சாட்டு

🕔 July 15, 2021

கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் 88000 கோடிரூபாவை அச்சிட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது சிம்பாப்வேயின் மூலோபாயமாக காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் 2900 கோடி ரூபா மட்டுமே அச்சிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே அவர் இந்த விவரங்களைக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“சுதந்திரத்திற்குப் பின்னரான  காலத்தில் இந்த நாடு பல நெருக்கடிகளைச் சந்தித்தது என்பது உண்மைதான். பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடிகள், அரசியல், இன மற்றும் மதரீதியான  கொந்தளிப்புகள் இருந்தன. எதிர்மறையான  வளர்ச்சி விகிதங்கள் காணப்பட்டன .

கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது. ஆனால், நாங்கள் ஒருபோதும் வங்குரோத்து நிலையை அனுபவித்ததில்லை.

முதன்முறையாக வங்குரோத்து நிலையின் திசையில் முதல் படியை எடுத்துவைத்துள்ளோம். இன்று, வங்கித் துறையில் வெளிநாட்டு இருப்புக்கள் எதிர்மறையான  நிலைக்குக் குறைந்துவிட்டன. தொற்றுநோய் காரணம் அல்ல. இது நிதி நிர்வாகத்தில் அரசாங்கத்தின் பலவீனமே தவிர வேறில்லை.

நாங்கள் 2005 முதல் சர்வதேச நிதிச் சந்தையிலிருந்து அமெரிக்க டொலர் கடன்களை உயர்த்தியுள்ளோம். முதலீடுகளைத் திரும்ப பெற்றுக்கொள்வது பற்றிய முன்யோசனையின்றி, அவற்றை முதலீடு செய்தோம். இன்று, இந்த கடன்களை நாம் ‘மிக அதிக வட்டி விகிதங்களுடன்’ தீர்க்க வேண்டும்.

அது எம்மை பாதிக்கும். கடனை  திருப்பிச் செலுத்துவது ஒரு பெரிய பிரச்சினை. உதாரணமாக  எங்கள் வெளிநாட்டு கடன் கட்டணம் 2013இல் இரண்டு பில்லியன் டொ லர்களாக இருந்தது. அது இந்த ஆண்டு  07 பில்லியன் அமெரிக்கடொலர்களாகும். 03 பில்லியன் அமெரிக்க டொலர்  நாணய பரிமாற்றங்களை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

அடுத்த ஆண்டு அவற்றை நாங்கள் தீர்த்துக் கொள்ள வேண்டும். இது 10 பில்லியன் டொலராக இருக்கும். இதன்அர்த்தம், 2013 முதல் ஒரு தசாப்தத்துக்குள் எங்கள் கடன் தொகை (வட்டியுடன்சேர்த்து) ஐந்து மடங்கு அதிகரிக்கும். இந்தக் காலகட்டத்தில் எமது மொத்த உள்நாட்டு உற்பத்தி 20 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இதுதான் உண்மையான நெருக்கடி.

சர்வதேச மதிப்பீட்டு முகவரமைப்புகள் எங்கள் தரவரிசையை சி.சி.சி நிலைக்கு குறைத்துள்ளன (வெளிநாட்டு நாணய இறைமை வெளிமட்ட கடனை  திருப்பிச் செலுத்தும் சுமையை சவாலுக்குட்படுத்துகின்றன). நாங்கள் அறவிடமுடியா த மட்டத்துக்கு மேலாக மட்டுமே இருக்கிறோம்.

இலங்கை அபிவிருத்தி பிணை முறிகளை வழங்குவதன் மூலம் 100 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டவிருந்தது. அதில் 35 சதவீதத்திற்கு மட்டுமே கேள்வி மனுக்கோரல்  இருந்தது. இத்தகைய நெருக்கடி சுதந்திரத்திற்கு பின்னரான  காலத்தில் ஏற்பட்டிருக்கவில்லை .

இன்று, டொலர்கள் கறுப்பு சந்தையில் 240 ரூபாவாக விற்கப்படுகிறது. இது  300 ரூபாவாக அதிகரிக்கும் நிலையுள்ளது. இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள ஒரு மூலோபாயமாக இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ளது. வாகனங்கள் தொடக்கம்  ரசாயன உரங்கள் வரை இறக்குமதி செய்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது, தொற்று நோயுடன் உணவு நெருக்கடி தவிர்க்க முடியாதது. எரிபொருள் துறையில் நெருக்கடியையும் எதிர்வு கூறமுடியும்.

முன்னைய  நல்லாட்சி  அரசு 2900 கோடி ரூபாவை மட்டுமே அச்சிட்டது. ஆனால், தற்போதைய அரசு 88000 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளது. . இது சிம்பாப்வேயின் மூலோபாயமாக காணப்படுகிறது.

அரசாங்கத்தினை மாற்றுவதால் இந்த நெருக்கடியிலிருந்து நாம் வெளியேற முடியாது. நம் நாட்டில், தகுதியுள்ள தொழில் நிபுணர்கள்  உள்ளனர். அரசியலில், அத்தகைய நிபுணர்களுக்கான கதவுகள் மூடப்பட்டுள்ளன. வணிகத் துறையிலும், அவர்களுக்கு அதிகளவுக்கு இடமில்லை.

எனவே, இந்த நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும் புதிய பொருளாதார பாதையை உருவாக்கவும் எங்களுக்கு ஒரு புதிய தலைமுறைத்  தலைவர்கள் தேவை.

தகுதி அடிப்படையில் சமூக ஏணிபடிகளை அளவுகோலாக  கொண்ட மக்களின் தலைமுறை அதுதான்” எனவும் அவர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்