நாவலப்பிட்டி நகர சபை, பொதுஜன பெரமுன வசமானது

🕔 July 15, 2021

நாவலப்பிட்டி நகரசபை – பொதுஜன பெரமுன கட்சியின் வசமானது.

ஏற்கனவே இந்த சபையானது ஐக்கிய தேசியக்க கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் வசம் இருந்தது. இவ்வாறு யானைச் சின்னத்தில் தெரிவானவர்களில் பெரும்பான்மையானோர் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களாக இருந்தனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற வாக்கெடுப்பில் யானைச் சின்னத்தில் தெரிவான 04 உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவருக்கு வாக்களித்தமை காரணமாக, அவர் அச்சபையின் தவிசாளராகத் தெரிவானார்.

இறுதியாக நடைபெற்ற நாவலப்பிட்டி நகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னம் சார்பில் 07 உறுப்பினர்களும், பொதுஜன பெரமுன கட்சியில் 05 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் ஜேவிபி ஆகிய கட்சிகள் சார்பில் தலா ஒரு உறுப்பினரும் தெரிவாகி இருந்தனர்.

நாவலப்பிட்டி நகர சபையில் மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்