மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடியுமா: உள மருத்துவர் விளக்கம்

🕔 July 15, 2021

னநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்க முடியும் என உளவியல் மருத்துவ நிபுணர் நீல் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நித்திரை இன்றி இருப்பார்களாயின் அது முதலாவது அறிகுறியாக கண்டறியப்படும்.

அதன்பின்னர் அவர்கள், வழமையான செயற்பாடுகளில் இருந்து விலகி வேறு சில அறிகுறிகளையும் வெளிப்படுத்துவார்கள்.

எனவே, அவர்கள் தொடர்பில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும் என்றும், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் எந்தவித சிக்கலும் இல்லை என்றும் உளவியல் மருத்துவ நிபுணர் நீல் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்