சிங்கப்பூரில் 233 பிரசுரங்கள் மீதான தடை நீக்கம்; செக்ஸ் சஞ்சிகை ‘பிளேபோய்’ மீது தொடர்ந்தும் தடை

🕔 November 26, 2015

Singapore - 097சிங்கப்பூரில் தடை செய்ப்பட்டிருந்த 250க்கும் மேற்பட்ட பிரசுரங்களின் எண்ணிக்கையை, அந்த நாட்டு அரசு, 17ஆகக் குறைத்துள்ளது.

இப்போது தடை விலக்கப்பட்ட புத்தகங்களில் , 1748ம் ஆண்டில் முதலில் பிரசுரிக்கப்பட்ட ஆங்கில சிருங்கார நாவலான ‘ஃபேனி ஹில்’ அடங்கும். அதேபோன்று, ‘தெ லாங் மார்ச்’ என்ற கம்யூனிச புத்தகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையும் விலக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், செக்ஸ் சஞ்சிகைகளான, ‘பிளேபோய்’ மற்றும் ‘ஹஸ்லர்’ போன்றவை மீது விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்ந்து நீடிக்கிறது.

அதே போல ‘ஜெஹோவாவின் சாட்சிகள்’ கிறித்தவ மதப் பிரிவின் பிரசுரங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையும் நீடிக்கிறது.

இந்தப் பிரிவின் புத்தகங்கள் 1972ல் தடை செய்யப்பட்டிருந்தன. இந்த திருச்சபை கட்டாய ராணுவச் சேவைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதாலும், தேசிய கீதத்தைப் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது என்ற காரணத்தாலும் தடை செய்யப்பட்டிருந்தன.

இந்த நடவடிக்கையானது, சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பிரதிபலிப்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்