புலிகளைப் போற்றி எழுதியவர் கைது

🕔 July 3, 2021

புலிகள் இயக்கம் மற்றும் அதன் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனைப் போற்றி, சமூக ஊடகத்தில் எழுதியமைக்காக, திருகோணமலையில் 24 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்பு பிரிவினரால் அவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஆட்டோ சாரதியான அவர், தேசிய ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலான பதிவை இட்டிருப்பதாகவும், இது பயங்கரவாத தடை சட்டம் மற்றும் அரசியல் மற்றும் சிவில் உரிமைக்கான சர்வதேச சட்டம் என்பவற்றின் கீழ் குற்றமாகக் கருதப்படுவதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்