தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை இம் மாதம் மீண்டும் திறப்பது குறித்து கவனம்: கல்வியமைச்சர்

🕔 July 2, 2021

தெரிவு செய்யப்பட்ட சில பாடசாலைகளை இம்மாதம் திறப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள நூற்றுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக திறப்பதற்கே கவனஞ் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நூற்றுக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் நாட்டில் சுமார் 03 ஆயிரம் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீதமுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பல கட்டங்களாக தொடங்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் தற்போது மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்