மூன்று நகர சபை தவிசாளர்களின் உறுப்புரிமைகள் பறிபோயின: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

🕔 June 17, 2021

மூன்று நகர சபைகளின் உறுப்புரிமைகளும் தவிசாளர் பதவிகளும் பறிபோயுள்ளன.

நேற்று முன்தினம் 15ஆம் திகதியிடப்பட்டு வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தலில், இவர்களின் நகர சபை உறுப்புரிமைகள் பறியோயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி, தங்காலை மற்றும் வெலிகம நகர சபைகளின் தவிசாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் வகித்த உறுப்புரிமையை இழந்துள்ளமையினால், அவர்களின் நகர சபை உறுப்புரிமையும் பறியோயுள்ளன. இதனால், அவர்கள் அச்சபைகளில் வகித்து வந்த தவிசாளர் பதவிகளும் பறியோயுள்ளன.

இதன்படி நாவலப்பிட்டி நகர சபைத் தவிசாளர் சசங்க சம்பத் சஞ்ஜீவ, தங்காலை நகர சபைத் தவிசாளர் ரவிந்து தில்ஷான் மற்றும் வெலிகம நகர சபைத் தவிசாளரான விஜேரத்ன ஜயவிக்ரம அச்சபையின் உறுப்பினர் பதவிகளை இழந்துள்ளமையினால், தவிசாளர் பதவிகளும் பறிபோயுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களான மேற்படி மூவரும், கடந்த பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவாக செயற்பட்டமையை அடுத்து, அவர்களின் உறுப்புரிமையை ஐக்கிய தேசியக் கட்சி நீக்கியமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்