பயணத்தடை 14ஆம் திகதி நீக்கப்படும்: ராணுவத் தளபதி

🕔 June 10, 2021

நாட்டில் அமுல் செய்யப்பட்டுள்ள பயணத் தடை, எதிர்வரும் 14ஆம் திகதி நீக்கப்படும் என, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

14ஆம் திகதி காலை 4.00 மணிக்குப் பின்னரும் பயணத் தடையை நீடிப்பதற்கான தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மே மாதம் 21ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை அமுலாக்கப்பட்ட பயணத் தடை, பின்னர் இம்மாதம் 07ஆம் திகதி வரை நிர்ணயிக்கப்பட்டு, அதன் பின்னர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.

நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு, இந்தப் பயணத் தடை அமுல் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments