கிராம சேவகர் ஆட்சேர்ப்பு பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதித் திகதி நீடிப்பு

🕔 June 10, 2021

கிராம சேவகர் IIIஆந் தரத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கிணங்க விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதி ஜுலை மாதம் 07ஆம் திகதியாகும்.

எவ்வாறாயினும் விண்ணப்பத்தில் கோரப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் நாள் – ஜுன் மாதம் 28ஆம் திகதி என்றும், அதில் மாற்றங்கள் இல்லை எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சைக்கு இணையம் ஊடாகவும் விண்ணப்பிக்க முடிவும் என்றும், அதற்கான அறிவுறுத்தல்கள் doenets.lk எனும் தளத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பரீட்சைக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்