கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை: சுகாதாரப் பரிசோதகர் சங்க தலைவர்

🕔 June 6, 2021

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்ற போதும், தினமும் அறிக்கை செய்யப்படும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவிற்கு குறையவில்லை என, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஏராளமானோர் பயணக் கட்டுப்பாடுகளை மீறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

“பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், அடுத்த வார இறுதிக்குள் நோயாளிகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இருப்பினும், அத்தியாவசிய சேவைகளுக்காக பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதை வைத்து பலர் பயணம் மேற்கொள்வதால், எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்