ஆயுமேந்தியோர் நடத்திய தாக்குதலில் 132க்கும் மேற்பட்டோர் பலி: புர்கினா பாசோ நாட்டில் கொடூரம்

🕔 June 6, 2021

மேற்கு ஆபிரிக்காவிலுள்ள இஸ்லாமியர்கள் அதிகளவில் வாழும் நாடான ‘புர்கினா பாசோ’ (Burkina Faso) விலுள்ள ஒரு கிராமத்தில், ஆயுதமேந்தியோர் நடத்திய தாக்குதலில் 132 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் அந்த நாட்டில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதல் இதுவாகும் என்று, புர்கினா பாசோஅரசாங்கம் தெரிவித்துள்ளது.

சொல்ஹான் எனும் கிராமம் மீது வெள்ளிக்கிழமையன்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலின் போது, வீடுகளும் உள்ளூர் சந்தையும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் உரிமை கோரவில்லை. ஆயினும் இஸ்லாமியவாதிகளின் தாக்குதல்கள் நாட்டில், குறிப்பாக எல்லைப் பகுதிகளில் அதிகரித்து வருகின்றன.

இந்த சம்பவத்தால் தான் சீற்றமடைந்துள்ளதாக ஐ.நா தலைவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலையடுத்து, தேசிய துக்கத்தை மூன்று தினங்களுக்கு அனுஷ்டிப்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கபோர் அறிவித்துள்ளார்

மேலும் ‘தீய சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கவேண்டும்’ எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்