டொனால்ட் டரம்ப் செலுத்திக் கொண்ட கொரோனா மருந்து, 84 வயது இந்தியரைக் காப்பாற்றியது: இலங்கை விலை 03 லட்சத்து 28 ஆயிரம் ரூபா

🕔 May 30, 2021

மெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொரோனாவில் இருந்து காப்பாற்றிய ‘அன்ரிபொடி கொக்டய்ல்’ (Antibody cocktail) மருந்து, இந்தியாவைச் சேர்ந்த 84 வயதான மொஹபத் சிங் என்பவருக்கு செலுத்தப்பட்டதன் மூலம், அவர் கொரோனா தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில், ட்ரம்பை குணப்படுத்திய மருந்தால் இந்தியாவில் குணமான முதல் நபர் என மொஹபத் சிங் அறியப்படுகிறார்.

கடந்த 10ஆம் திகதி முதல், இந்த மருந்தை அவசர சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் என்று இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியது.

சில தினங்களுக்கு முன்னர், ஹரியானாவைச் சேர்ந்த 84 வயதான மொஹபத் சிங் என்பவருக்கு, இந்த ‘அன்ரிபொடி கொக்டெய்ல்’ மருந்தைக் கொடுத்து கொரோனா தாக்கத்திலிருந்து அவரை மீட்டுள்ளனர்.

‘கசிரிவிமாப்’, ‘இம்டெவிமாப்’ (Casirivimab and Imdevimab) ஆகிய இரண்டு மருந்துகளைச் சேர்த்துத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ‘அன்ரிபொடி கொக்டய்ல்’ (Antibody cocktail) மருந்தை, ‘ரோச் இந்தியா’ மருந்து நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதை விற்பனை செய்வது, சிப்லா மருந்து நிறுவனம்.

இந்த மருந்தின் விலை அதிகபட்சமாக இந்திய விலையில் 1,19,500 ரூபா (இலங்கை மதிப்பில் சுமார் 03 லட்சத்து 28 ஆயிரம் ரூபா) ஒரு டோஸ் மருந்தின் விலை 59,570 இந்தி ரூபா எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்து ஒரு பக்கெட் வாங்கினால், இரண்டு நோயாளிகளைக் காப்பாற்ற முடியும் என்று ‘ரோச்’ இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்