நாடு முழுவதும் இன்றிரவு தொடக்கம் ஊடரங்குச் சட்டம் அமுல்: போலிச் செய்தி வெளியிட்ட யூடியூப் சேனல் தொடர்பில் விசாரணை

🕔 May 1, 2021

நாடு முழுவதும் இன்று இரவு 12 நள்ளிரவு தொடக்கம் எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்படும் எனத் தெரிவித்து யூடியூப் சேனல் ஒன்று போலி செய்தி வெளியிட்டமை தொடர்பாக பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட மேற்படி செய்தி குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

“நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும் என்பதில் எந்த உண்மையும் இல்லை. பொது மக்களிடையே பீதியை உருவாக்கும் இவ்வாறானவர்கள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments