கொரோனா: நாளொன்றில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக, உலகளவில் இந்தியா பதிவு

🕔 April 7, 2021

நாளொன்றில் அதிகளவானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நாடாக, உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

உலகளவிலான கொரோனா பாதிப்பு விவரங்களை கணக்கிட்டு வெளியிட்டு வரும் ‘வேல்டோமீட்டர்ஸ்’ இணையதள விவரங்களின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 01 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகமாக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிகளவில் இருக்கின்றது.

இதன்மூலம் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 03ஆவது இடத்தில் நீடிக்கின்றது.

ஆனால், ஒருநாள் கொரோனா பாதிப்பில் பிரேசில், அமெரிக்காவை விட இந்தியா முன்னிலையில் உள்ளது.

பிரேசிலில் 82,869 பேருக்கும், அமெரிக்காவில் 62,283 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்