கொரோனா மரணங்கள்; 10 சத வீதத்தால் குறைவு: உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு

🕔 February 17, 2021

லகளவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10 சத வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தினுள் உலகம் முழுவதிலும் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.

மேலும் புதிதாக பதிவாகும் தொற்றாளர்கள் எண்ணிக்கை 16 சதவீதத்தினால் குறைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

“ஆபிரிக்கா மற்றும் மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் தொற்றாளர்கள் பதிவாவது 20 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.

அவ்வாறே, தென்கிழக்காசிய வலயத்தில் தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை 13 சதவீதத்தினாலும் அமெரிக்க வலயத்தில் தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை 16 சதவீதத்தினாலும் குறைவடைந்துள்ளது.

கடந்த வாரத்தினுள் ஐரோப்பிய வலயத்தினுள் தொற்றாளர்கள் பதிவாகும் தொகை 16 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ள அவர்; கிழக்கு மத்திய தரைகடல் பிராந்தியத்தில் தொற்றாளர்கள் பதிவாகும் தொகை 07 சதவீத அதிகரிப்பை காட்டுவதாகவும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்