பிபிசி உலக சேவைக்கு சீனாவில் தடை

🕔 February 12, 2021

பிபிசி உலக சேவையை சீன நாட்டு அரசாங்கம் நேற்று தடைசெய்துள்ளது.

பிபிசி உலக சேவையானது உண்மை மற்றும் நியாயமற்றது என, அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

‘செய்தி உண்மையாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும், சீனாவின் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது’ என, அந்த நாட்டின் தேசிய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிருவாகம் தெரிவித்துள்ளன.

சீனாவின் இந்த நடவடிக்கை தொடர்வில் தாம் ஏமாற்றமடைந்துள்ளதாக பிபிசி உலக சேவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ‘ட்விட்டர்’ பதிவொன்றை வெளியிட்டுள்ள பிபிசி செய்திப் பிரிவு; ‘உலகில் மிகவும் நம்பகத்தன்மையான செய்திச் சேவையாக பிபிசி உள்ளது. நேர்மையாகவும் பாரபட்சமின்றியும், அச்சமில்லாமலும் பக்கச்சார்பின்றியும் செய்திகளை பிபிசி வழங்குகிறது’ என்றும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்