பதுளை மாநகர சபை, ஆணையாளரின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது: ஆளுநர் அறிவிப்பு

🕔 February 10, 2021

துளை மாநகர சபையின் செயற்பாடுகளை ஆணையாளரின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநகர மேயருக்கு பெரும்பான்மையான சபை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையான மாநகர சபை உறுப்பினரின் ஆதரவு இல்லாத காரணத்தால் சபை செயலற்றதாகிவிட்டதாக ஆளுநர் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து ஆட்சி செய்து வந்த நிலையில் அவர்களுக்கு 12 ஆசனங்கள் கிடைத்திருந்தன.

அதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த பிரியந்த ஆரியசிறி நகர மேயராக செயற்பட்டு வந்தார்.

இரண்டு கட்சினருக்கும் இடையிலான உடன்பாட்டின் அடிப்படையில் இரண்டு வருடங்களுக்கு மாத்திரம் அவர் நகர மேயராக நியமிக்கப்பட்டார் எனக் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்