ஒரு தொகுதி பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

🕔 January 31, 2021

ரு தடவை மட்டும் உபயோகிக்கப்படும் ‘சாஷே’ (Sachet) பக்கட் உள்ளிட்ட ஒரு தொகுதி பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் மார்ச் 31ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த தடையினை சுற்றாடல் துறை அமைச்சு விதித்து, வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதன்படி விவசாய ரசாயனப் பொருட்களைப் பொதியிடப் பயன்படுத்தப்படும் ‘பொலியதிலீன் டெரெப்தாலேட்’ அல்லது ‘பொலிவினைல் குளோரைடு’ ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன.

மேலும் 20 மில்லி / 20 கிராம் அல்லது அதற்கு குறைந்த உள்ளடக்கத்தினைக் கொண்ட(உணவு மற்றும் மருந்துகளை பொதி செய்வதைத் தவிர்ந்த) ‘சாஷே’ (Sachet) பக்கட்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.

ஊதக்கூடிய விளையாட்டுப் பொருட்கள்கள் (பலூன்கள், பந்துகள், நீர் மிதக்கும் / நீர் தடாக, நீர் விளையாட்டுப் பொருட்கள் தவிர்ந்தவை) மற்றும் பிளாஸ்டிக் கொண்ட ‘கொட்டன் பட்’ (மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ‘கொட்டன் பட்’ தவிர) ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்