சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை பதிவு செய்யும் திட்டம் இல்லை: கெஹலிய விளக்கம்

🕔 December 21, 2020

மூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரைப் பதிவு செய்யும் திட்டம் எவையும் அரசாங்கத்திடம் இல்லை என, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப முகாமைக் கட்டமைப்புக்களை பதிவு செய்வது குறித்தே அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்போரை பதிவு செய்யும் செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக, ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்’ எனும் செய்திகள் நேற்று தினம் வெளியாகியிருந்த நிலையில், இன்று அறிக்கை ஒன்றின் ஊடாக அதனை அவர் மறுத்துள்ளார்.

உண்மையில் சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவோரைப் பதிவு செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் அவர், உலகளாவிய ரீதியில் வளர்ச்சி கண்டுவரும் தகவல்தொழில்நுட்ப முறைமை, உள்நாட்டு சிறு வணிகங்கள் மற்றும் தகவல் சேகரிப்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்ற கருத்தையே வெளிப்படுத்த முற்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

‘இது எமது நடுத்தர வணிகங்கள் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இத்தகைய கருத்து மேலும் பல இலங்கையர்களால் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறான தகவல் தொழில்நுட்ப வலையமைப்புக்கள் ஊடாக பெருமளவான நிதி நாட்டைவிட்டு வெளியேறுகின்றது. ஆகவே வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப முகாமைக் கட்டமைப்புக்களை பதிவு செய்வது குறித்தே அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. மாறாக சமூகவலைத்தளப் பயன்பாட்டாளர்களை பதிவு செய்யும் திட்டம் எதுவுமில்லை’ என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரை, பதிவு செய்யத் திட்டம்: ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய

Comments

புதிது பேஸ்புக் பக்கம்