தலைப்புச் செய்திகள்

உலகில் அபாயகரமான தொற்று நோயொன்றினால், நாட்டில் 500 பேர் பாதிப்பு

‘லிஸ்மனாயசிஸ்’ (Lishmaniasis) எனும் அபாயகரமான நோய், நாட்டில் சுமார் 500 நோயாளிகளுக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோயாளிகள் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள பதவியா, நாச்சதுவா, தலாவ, தம்புத்தேகம, நொச்சியாகம மற்றும் இபலோகம பகுதிகளில் பதிவாகியுள்ளனர்.

‘லிஸ்மனாயசிஸ்’ என்பது உலகில் 09ஆவது மிக ஆபத்தான தொற்று நோயாகும். 97 நாடுகளில் இத்தொற்று நோய் பரவியுள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.

இந்த நோய் மணல் பூச்சி மூலம் பரவுவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவரை மணற்பூச்சி கடித்துவிட்டு, ஆரோக்கியமானவரைக் கடிக்கும்போது இந்த நோய் எளிதாகப் பரவுகிறது.

எனவே, ‘லிஸ்மனாயசிஸ்’ பரவுவது குறித்த விழிப்புணர்வு திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 09 மணி முதல் மதியம் 12.30 மணி வரை அநுராதபுர விஜயபுர மாகாண சுகாதார பயிற்சிப் பிரிவில் நடைபெறும் என்று அனுராதபுர மாவட்ட செயலகத்தின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நன்றி: தினக்குரல் இணையம்