தேசியப்பட்டில் ஊடாக நாடாளுமன்றம் செல்லுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை, ரணில் நிராகரித்தார்

🕔 November 23, 2020

– முன்ஸிப் –

தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் ஊடாக நாடாளுமன்றம் செல்லுமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் விடுத்த வேண்டுகோளை, அவர் நிராகரித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி, எந்தவித ஆசனங்களையும் நேரடியாகப் பெற்றுக் கொள்ளாமல் படுதோல்வியடைந்த நிலையில், தேசியப்பட்டியல் ஊடாக மட்டும் அந்தக் கட்சிக்கு ஒரு உறுப்புரிமை கிடைத்தது.

ஆயினும், பொதுத் தேர்தல் நடைபெற்று மூன்றரை மாதங்களாகிய போதும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை இன்னும் நிரப்பப்படவில்லை.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், அந்தக் கட்சியின் தலைவரை, தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆயினும் இதனை அவர் நிராகரித்துள்ளதாக ‘கொழும்பு கசற்’ செய்தி வெளியிட்டுள்ளது.

விளம்பரம்

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் உறுப்பினர் ஒருவருக்கு தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என, இதன்போது ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்