பசில் நாடாளுமன்றம் வருவதற்கு, பதவியை விட்டுக் கொடுப்பேன்: நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடேகொட

🕔 November 22, 2020

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் அங்கம் வசிக்கவேண்டும் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடேகொட தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டையும் அரசாங்கத்தையும் முன்னோக்கி நகர்த்தும் திறன், பசில் ராஜபக்ஷவுக்கு உண்டு என்றும், எனவே அவர் நாடாளுமன்றத்துக்குள் வருவதற்கு, தனது இடத்தை வழங்கவும் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எனினும், இது எப்போது எவ்வாறு நடக்கும் என்பது பற்றி இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், அப்போது நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த சரத் பொன்சேகா சிறை சென்றமையை அடுத்து, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஜயந்த கெடேகொடவுக்கு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

ஜனநாயகக் கட்சியின் தலைவராக சரத் பொன்சேகா பதவி வகித்த போது, அந்தக் கட்சியில் ஜயந்த கெடேகொட அங்கம் வகித்திருந்தார்.

தொடர்பான செய்தி: பசில் ராஜபக்ஷ ஜனவரியில் அமைச்சராகிறார்; சரத் வீரசேகரவுக்கும் பதவி உயர்வு

Comments