அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜோ பைடன் வெற்றி

🕔 November 7, 2020

மெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.

பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபையின் 270 வாக்குகளின் பலத்தை கடந்து அவருக்கு 273 தேர்தல் சபை வாக்குகள் கிடைத்துள்ளன.

இதேவேளை டொனால்ட் ட்ரம்ப் 214 தேர்தல் சபை வாக்குளையே பெற்றுள்ளார்.

எனவே, அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகியுள்ளார்.

இது இவ்வாறிருக்க ‘அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நானே அதிக அளவில் வென்றேன்’ என்ற ஒற்றை வரியை தனது ட்விட்டர் பக்கத்தில் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார் .

முன்னதாக, மற்றொரு பதிவில் தனது வழக்கறிஞர்கள் அமெரிக்க நேரப்படி காலை 11.3 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார் டிரம்ப். பிறகு அந்த பதிவை நீக்கி விட்டு, மிகப்பெரிய செய்தியாளர் சந்திப்பு நடக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், டிரம்ப் தரப்பு நடத்தவிருக்கும் செய்தியாளர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்