குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

🕔 October 17, 2020

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (சிஐடி) புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த டி சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அதன்படி, சிஐடியின் பணிப்பாளராக பணியாற்றி வந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஆர்.பி.ஜே. டி அஸ்விஸ், பயங்கரவாத புலனாயவு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கிகாரத்துடன், இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்