மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை; குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில்

🕔 November 3, 2015

Flood - batticaloa - 01
– பழுலுல்லாஹ் பர்ஹான் –

ட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக, காத்தான்குடி, ஆரையம்பதி மற்றும் கோயில்குளம் பிரதேசங்களிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் குடியிருப்பிடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, கல்லடி , காத்தான்குடி, புதியகாத்தான்குடி, ஏத்துக்கால், கர்பலா, பாலமுனை, கிரான், கல்லாறு, பெரிய கல்லாறு, துறைநீலாவணை, களுவாஞ்சிக்குடி, பட்டிப்பளை, வவுணதீவு, ஒல்லிக்குளம், மண்முனை, சிகரம், புல்லுமலை, ஏறாவூர், ஒட்டமாவடி, வாழைச்சேனை,நாவலடி மற்றும் வாகரை உள்ளிட்ட பல பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால்  இப்பகுதி மக்களின் அன்றாக செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதோடு, கூலித்தொழிலாளர்களும், பாடசால மாணவர்களும் பெரிதும் அவஸ்தைப் படுகின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் தொடச்சியாக பெய்துவரும் அடை மழையால், நீர் நிலைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.Flood - batticaloa - 05Flood - batticaloa - 02Flood - batticaloa - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்