ஈஸ்டர் தாக்குதல்: தெஹிவளை குண்டுதாரி, வெடிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர் சந்தித்த புலனாய்வு பிரிவு அதிகாரி யார்?

🕔 September 26, 2020

டந்த வருடம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் போது – தெஹிவளையிலுள்ள ‘ட்ரப்பிக் இன்’ எனும் உணவு விடுதியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய நபர், அதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர், அரச புலனாய்வு அதிகாரி ஒருவரை சந்தித்தார் என்று, தற்போது கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

குறித்த தற்கொலைத் தாக்குதல்தாரி யாரைச் சந்தித்தார் என்பது குறித்து விசாரிக்குமாறும், அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர், அதுகுறித்து கிடைத்த உளவு தகவல்களை நாட்டில் உள்ள பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும் தொலைபேசி மூலம் தான் கூறியதகவும், இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பான அணைத்து இலத்திரனியல் பதிவுகளும் தற்போது அழிக்கப்பட்டுள்ளதாகவும் பூஜித் ஜயசுந்தர குற்றம்சாட்டியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் சகோததரர் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவராக இருந்தார் என்றும், அவர் மூலமாக மைத்திரிபால இந்த தடயங்களை அழித்தாரா என்பதை ஆணைக்குழு விசாரிக்க வேண்டும் என்றும் ஜயசுந்தர கோரிக்கை இதன்போது விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்