அமைச்சரின் இணைப்பாளராக நியமனம் பெற்ற றிசாத் ஏ காதர்; நாம் ஊடகர் பேரவையினால் கௌரவிப்பு

🕔 September 22, 2020

– முன்ஸிப் –

நாம் ஊடகர் பேரவையின் (We Journalists Forum) பொருளாளர் றிசாத் ஏ காதர், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி ராஜாங்க அமைச்சரின் கிழக்கு மாகாண இணைப்பாளராக நியமனம் பெற்றமையை அடுத்து, அவரை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வொன்றினை நேற்று திங்கட்கிழமை இரவு – நாம் ஊடகர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.

நாம் ஊடகர் பேரவையின் (We Journalists Forum) தலைவர் யூ.எல். மப்றூக் தலைமையில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், றிசாத் ஏ காதர் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அமைப்பின் செயலாளர் ஏ.பி. அப்துல் கபூர் நெறிப்படுத்திய இந் நிகழ்வில், அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் றிசாத் ஏ காதருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தனர்.

மாகாண சபைகள், உள்ளுரட்சி ராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின், கிழக்கு மாகாணத்துக்கான இணைப்பாளராக ஊடகவியலாளர் றிசாத் ஏ காதர் – கடந்த வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.

தொடர்பான செய்தி: அமைச்சர் சரத் வீரசேகரவின் கிழக்கு மாகாண இணைப்பாளராக றிசாத் ஏ காதர் நியமனம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்