இரவு உணவின்றி ஒவ்வொரு இரவும் 69 கோடி பேர் உறங்கச் செல்கின்றனர்: மனதை வருத்தும் ஆய்வு அறிக்கை

🕔 September 19, 2020

லகில் சுமார் 690 மில்லியன் பேர் ஒவ்வொரு இரவிலும் உணவின்றி உறங்கச் செல்வதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

அவர்களில் மூவரில் ஒருவர் போசணைக் குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான பின்புலத்தில், இலங்கையில் வருடாந்தம் 270,000 தொன் பழங்களும் மரக்கறிகளும் அழிவடைவதுடன், இதனால் 20 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகிறது.

2050 ஆம் ஆண்டளவில் உலக சனத்தொகை 9.1 பில்லியனாக அதிகரிக்கலாம் என்பதுடன், அது தற்போதைய சனத்தொகையிலிருந்து 34 வீத உயர்வாகக் கணிக்கப்பட்டுள்ளது.

சனத்தொகை அதிகரித்து செல்வதற்கு இணையாக உணவு உற்பத்தி மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பாகக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு வேலைத் திட்டப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அறுவடை தொழில்நுட்ப நிறுவனங்களின் பெறுபேறுகளின் பிரகாரம் இலங்கையில் மரக்கறி மற்றும் பழங்களின் வருமானத்தில் 30 முதல் 40 வீதம் வரையில் இழப்பு ஏற்படுகிறது.

நமது நாட்டில் 05 வயதிற்குக் குறைந்த பிள்ளைகளில் போசணைக் குறைபாடு மட்டம் 21 வீதமாகவுள்ளது.

சிரேஷ்ட பிரஜைகளில் 73 வீதமானோருக்கு பழங்கள் மற்றும் மரக்கறிகளைப் பெற முடியாதுள்ளது.

அவ்வாறான நிலைமையில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மரக்கறி, பழங்களை அப்புறப்படுத்தி அவற்றை விலங்குகளின் உணவாக விற்கும் போது அவை வீண் விரயமாகும் சந்தர்ப்பங்கள் அதிகமுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்