பழங்கால எகிப்து இடுகாட்டில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமப்பேழைகள் கண்டுபிடிப்பு

🕔 September 21, 2020

கிப்தில் உள்ள பழங்கால இடுகாடு ஒன்றில், 2500 ஆண்டுகளுக்கும் மேலாக புதைந்து கிடந்த 27 ஈமப்பேழைகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் தெற்கே உள்ள சக்காரா எனுமிடத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த மாதத் தொடக்கத்தில் ஏற்கனவே 13 ஈமப்பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

தற்போது மேலும் 14 ஈமப்பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான ஈமப்பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டதில், இது அதிக எண்ணிக்கையிலானது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

வேலைப்பாடுகள் செய்யப்பட்ட, மரத்தாலான, நன்கு பாதுகாக்கப்பட்ட ஈமப் பேழைகள் மற்றும் பிற கலைப் பொருட்களின் படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

யுனெஸ்கோ பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள சக்காரா 3,000 ஆண்டுகளுக்கு மேலாக இடுகாடாக உள்ளது.

Comments