ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்த்தன: மண் கவ்வினார் ரவி

🕔 September 14, 2020

க்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் பிரதி செயலாளராகப் பதவி வகித்து வந்த நிலையில், இந்தப் பதவி இவருக்குக் கிடைத்துள்ளது.

இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போது இடம்பெற்ற ரகசிய வாக்கெடுப்பில் அவர் புதிய தலைவர் பதவிக்கு தெரிவானார்.

புதி தலைவர் பதவிக்காக கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்கவும் போட்டியிட்டிருந்தார்.

இதன்போது வாக்கெடுப்பில் ருவன் விஜேவர்தனவுக்கு 28 வாக்குகளுகம் ரவி கருணாநாயக்கவுக்கு 10 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியில் சஜித் பிரேமதாஸ வகித்த பிரதித் தலைவர் பதவிக்கே, ருவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

26 வருடங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க பதவி வகிக்கும் நிலையில், புதிய தலைவர் பதவிக்கான போட்டியில் ருவன் விஜேவர்த்தனவின் பெயரும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ருவன் விஜேவர்த்தன, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்