20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய, சட்டத்தரணிகள் சங்கத்தினால் நிபுணர் குழு நியமனம்

🕔 September 12, 2020

ரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைக் கொண்டு வரும் பொருட்டு முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயமன்ன தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குழுவில் உறுப்பினர்களாக 13 ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் இரண்டு சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிர்வாக குழு மற்றும் சட்ட சபையினால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் குறித்த குழுவில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments