அட்டாளைச்சேனை; ஒலிபெருக்கியில் தொழுகை நடத்தும் பள்ளிவாசல்கள்: எழுத்து மூல தீர்மானம் தொடர்ந்தும் புறக்கணிப்பு

🕔 September 3, 2020

– அஹமட் –

ட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தின் கீழுள்ள பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறும் போது, அதனை ஒலிபெருக்கியில் ஒலிக்க விடக் கூடாது என, அட்டாளைச்சேனை பெயரி பள்ளிவாசல் நிருவாகம் உத்தரவிட்டுள்ள நிலையில், அநேகமான பள்ளிவாசல்கள் இந்த உத்தரவை உதாசீனப்படுத்தி வருகின்றன.

அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் நிருவாகத்தினர் கலந்து கொண்ட கூட்டமொன்று அண்மையில் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

அதன்போது, ‘தொழுகை நடைபெறுவதை ஒலிபெருக்கியில் ஒலிக்க விடுவதில்லை’ என்கிற தீர்மானம் எட்டப்பட்டதோடு, அனைத்து பள்ளிவாசல் நிருவாகத்தினரும் அதனை ஏற்றுகக் கொண்டு கையொப்பமிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஆயினும் குறித்த தீர்மானத்துக்கு இணங்குவதாக எழுத்து மூலம் உறுதியளித்த பல பள்ளிவாசல்களில் இடம்பெறும் தொழுகைகள், ஒலிபெருக்கிகளில் தொடர்ச்சியாக ஒலிவிடப்படுவதை அவதானிக் முடிகிறது.

இருந்தபோதும், இது குறித்து பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர் எதுவித நடவடிக்கைகளையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

தொழுகை நடைபெறுவதை ஒலிபெருக்கியில் ஒலிக்கவிடுவதால் எந்தவிதப் பயனும் இல்லை என்பதோடு, அது பல்வேறு வழிகளில் பிரச்சினைகளையும் பாவங்களையுமே ஏற்படுத்தி வருகின்றது.

மேலும், தேவையற்ற ஒரு செயற்பாட்டினை நாம் வலிந்து செய்வதன் மூலம், தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கவும் அது வழிவகுக்கும் என்பதையும் தொழுகையை ஒலிபெருக்கியில் ஒலிக்கவிடும் பள்ளிவாசல் நிருவாகத்தினர் புரிந்து கொள்தல் அவசியமாகும்.

எனவே, ஒலிபெருக்கியில் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் நிருவாகங்களுக்கு எதிராக, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்தல் அவசியமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்