புதிய ஊடகவியலாளர் அமைப்பு அட்டாளைச்சேனையில் அங்குரார்ப்பணம்

🕔 September 1, 2020

– ஏ.பி. அப்துல் கபூர், படம்: என்.எம். சப்னாஸ் –

‘நாம் ஊடகர் பேரவை’ (We journalists forum) எனும் பெயரில் ஊடகவியலாளர்களுக்கான புதிய அமைபொன்று இன்று செவ்வாய்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மேற்படி அமைப்பின் தலைவராக ஊடகவியலாளரும் பிபிசி செய்தியாருமான யூ.எல். மப்றூக் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இதன்போது செயலாளராக ஏ.பி. அப்துல் கபூர் (டெய்லி நியூஸ்) பொருளாளராக றிசாத் ஏ காதர் (தினகரன்) ஆகியோர் தெரிவாகினர்.

தினக்குரல் செய்தியாளர் ஏ.பி.எம். அஸ்ஹர் தேசிய அமைப்பாளராகவும், விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலி இணைப்பாளராக தெரிவு செய்யப்பட்டார்கள்.

இந்த அமைப்பின் உப தலைவராக ஊடகவியலாளர் ஏ. புஹாது, உப செயலாளராக ஊடகவியலாளர் ரி.கே. றஹ்மதுல்லா ஆகியோர் தெரிவாகினர்.

சூரியன் எப்.எம். முன்னாள் அறிவிப்பாளரும் புதிய குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஏ. றிம்ஸாத் – ‘நாம் ஊடகர் பேரவை’யின் கணக்காய்வாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமைப்பின் ஊடக செயலாளராக யூ.கே. ஜெஸீல் தெரிவானார்.

இதன்போது இளம் ஊடகவியலாளர்கள் நால்வர் செயற்குழுவுக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்