ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பு, மைத்திரியின் வீட்டுக்கு தகவல் தெரிவிப்பு: ஆணைக்குழு முன் சாட்சியம்

🕔 August 26, 2020

ப்ரல் குண்டுவெடிப்புக்கு முன்னதாக – அது தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தமையினை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பல தடவை பேசியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஈஸடர் குண்டு டிப்பு தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்துக்கு புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்த்தன 08,09,12,13,14 மற்றும் 15ஆம் திகதிகளில் இவ்வாறு அழைத்துப் பேசியுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி உரையாடல்கள் ஜனாதிபதி ஆணைக்குழு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதி இல்லத்துடன் தொடர்பு கொண்ட முன்னாள் புலனாய்வு பிரிவு பணிப்பாளர் யாருடன் பேசினார் எனத் தெரிவிக்கப்படவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்