மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூம், கொரோனாவினால் பாதிப்பு

🕔 August 26, 2020

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூம் – கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக ஏ.எப்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையினை அடுத்து, கொரோனாவினால் அவர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக, அவரின் குடும்ப உதவியாளர் கூறியுள்ளார்.

‘நான் கொரோனா பரிசோதனை செய்தேன், முடிவு நேர்மறையாக வந்துள்ளது’ என, முன்னாள் ஜனாதிபதி கையூம் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

மேலும் ‘சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் என்னையும் மற்ற அனைத்து நோயுற்ற மக்களையும் விரைவில் குணமடையச் செய்வதற்கு அருள்பாலிப்பானாக’ எனவும் அவரின் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 82 வயதுடைய மஹ்மூன் அப்துல் கையூம், மூன்று தசாப்தங்கள் ஆட்சியில் இருந்தார். 2008ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலகிய பின்னரும் அரசியலில் தீவிர செயற்பாட்டாளராக இருந்து வந்தார். இவர் ஒரு எதேச்சதிகார ஆட்சியாளர் என, எதிரணிகளால் விமர்சிக்கப்பட்டமை நினைவு கொள்ளத்தக்கது.

இருந்தபோதும், புவி வெப்பமடைதல் மற்றும் கடல் மட்டம் உயர்தல் போன்றவற்றுக்கு எதிரான ஆரம்ப பிரசாரகர்களில் ஒருவர் என்கிற சிறப்பு – மஹ்மூன் அப்துல் கையூமுக்கு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்