ஐ.தே.கட்சி தலைவர் பதவிக்கு மேலும் மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு

🕔 August 14, 2020

க்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மேலும் மூவரின் பெயர் பரிந்துரைக்கப்படடுள்ளதாகத் தெரியவருகிறது. அந்த வகையில் மொத்தமாக 07 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கட்சியின் செயற்குழுவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கட்சிக்கு புதிய மற்றும் இளம் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணநாயக்க, தயா கமகே, அகிலவிராஜ் கரியவாசம் மற்றும் வஜிர அபேகுணவர்தன ஆகியோரின் பெயர்கள், கட்சியின் தலைவர் பதவிக்காக ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அர்ஜுன ரணதுங்க, நவீன் திசாநாயக்க மற்றும் ருவன் விஜேவர்தனே ஆகியோரின் பெயர்களும் தலைவர் பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட்டன.

Comments