மைத்திரி, அதாஉல்லா உள்ளிட்ட முக்கியஷ்தர்கள் பலருக்கு அமைச்சர் பதவிகள் இல்லை

🕔 August 12, 2020

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்ட போதும், அரசாங்கத்தின் முக்கியஷ்தர்கள் பலருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படாமை குறித்து பரவலான பேச்சுக்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்தவித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவில்லை. பொலநறுவை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளை மைத்திரி இம்முறை பெற்றுக் கொண்டார்.

அதேவேளை, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும் இம்முறை எவ்வித அமைச்சர் பதவிகளும் கிடைக்கவில்லை.

இதேபோன்று, விஜேதாஸ ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா போன்றோருக்கும் அமைச்சர் பதவிகள் கிடைக்கவில்லை.

Comments