ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை; இம்முறை எழுதும் மாணவர்களுக்கு அடித்தது அதிஷ்டம்

🕔 July 29, 2020

ந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை இம்முறை எழுதும் மாணவர்களுக்கு முதலாவது வினாத்தாளுக்கான கால எல்லையை 15 நிமிடங்களினால் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் இதுவரையில் 45 நிமிடமாக இருந்த கால எல்லை ஒரு மணி நேரமாக அதிகரித்துள்ளது.

இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும இந்த விடயத்தை கூறியுள்ளார்.

ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி இவ்வருடத்துக்கான புலமை பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இரண்டாம் வினாத்தாளில் கேள்வியொன்றுக்கு தேர்வு செய்யும் பதில்களை 04 இல் இருந்து மூன்றாக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்