வீதி அபிவிருத்தி அதிகார சபை – அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தின் ‘குப்பை வேலை’: பொதுமக்கள் விசனம்

🕔 July 28, 2020

– முன்ஸிப் –

ட்டாளைச்சேனை பிரதான வீதியோரங்களில் வளர்ந்திருந்த பெரிய மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், அதன் இலை, குழைகள் அகற்றப்படாமல் வீதியில் பல நாட்களாகக் கிடப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய அலுவலகத்தால், தனியார் ஒருவருக்கு, வீதியிலுள்ள மரங்களை அறுத்து எடுக்கும் கொந்தராத்து உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர், அட்டாளைச்சேனை பிரதான வீதியோரங்களில் வளர்ந்திருந்த பெரிய மரங்கள் வெட்டப்பட்டன.

இருந்த போதும், வெட்டப்பட்ட மரங்களின் பாரிய துண்டுகளை எடுத்துச் சென்றுள்ள சம்பந்தப்பட்ட கொந்தராத்துக்காரர்; அவற்றின் இலை, குழைகளை அகற்றாமல் அந்த இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, இவ்விவகாரத்தில் தலையிட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையினர், வீதியில் கிடக்கும் மரத்தின் இலை, குழைகளை அகற்றாமல் – மிகுதி மரத்துண்டுகளைக் கொண்டு செல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

ஆயினும், வீதியோரங்களில் குவிந்து கிடக்கும் இலை, குழை குப்பைகள் இதுவரையில் அகற்றப்படவில்லை.

இதன் காரணமாக அட்டாளைச்சேனை பிரதான வீதியால் பயணிப்போர் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மரத்தை வெட்டுவதற்கு கொந்தராத்து வழங்கிய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய அலுவலகத்தினருக்கு, அதனை முறையாக நடைமுறைப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும் என, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்