மக்கள் காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தை குழப்ப முயற்சித்தவர்கள் விரட்டியடிப்பு: அட்டாளைச்சேனையில் சம்பவம்

🕔 July 20, 2020

– அஹமட் –

கில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை குழுப்புவதற்கு முயற்சித்த சிலர் – விரட்டியடிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் குடும்பத்தவர்கள் சிலரே இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

அட்டாளைச்சேனையில் மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த மேற்படி பிரசாரக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் பொத்துவில் பிரதேச வேட்பாளர் முஸ்ஸர்ரப் உரையாற்றக் கூடாது என்றும், அவ்வாறு உரையாற்றினால் அந்தக் கூட்டம் குழப்பப் படும் பிரச்சினையில் ஈடுபட்டோர் தெரிவித்திருந்தனர்.

ஆயினும் குறித்த கூட்டத்தில் முஸ்ஸர்ரப் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் குடும்பத்தைச் சேர்ந்த மேற்படி நபர்கள், மக்கள் காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தை குழப்பும் வகையில் அங்கு கூச்சலிட்டு வன்முறையில் ஈடுபடுவதற்கு ஆயத்தமாயினர்.

இதனையடுத்து கூட்டத்தை குழப்ப முயன்றவர்களை அங்கிருந்த மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அடித்து விரட்டினார்.

இதன் பின்னர் குறித்த கூட்டம் எவ்வித இடைஞ்சல்களும் இன்றி நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

குறித்த கூட்டத்தை குழப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்றபோது, முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்தமையைக் காணக் கூடியதாக இருந்தது. இவர் பல்வேறு தேர்தல் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர் எனக் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்