முஹம்மது நபியைப் பற்றி காட்டூன் வெளியிடப் போவதாக அச்சுறுத்தியவர் கைது

🕔 July 14, 2020

முஹம்மது நபியை பற்றி கார்ட்டூன் வெளியிடப்படும் என பேஸ்புக் இல் பதிவிட்ட இந்தியாவைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் வர்மா என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவின் விழுப்புரம் அருகே கீழ்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் (30) என்வர், சமூக வலைதளத்தில் ‘வர்மா கார்ட்டூனிஸ்ட்’ என்ற பெயரில் கார்ட்டூன் படங்களை வெளியிட்டு வருகிறார்.

சர்ச்சைக்குரிய யூ–டியூப் சேனல் ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டு, அதனை நடத்துகின்றவர்களை முஸ்லிம் தலைவர்கள் கண்டிக்க வேண்டும் என்றும் ‘இந்துக்கள் பக்கம் நிற்கிறோம்’ என முஸ்லிம்கள் உறுதி செய்வதோடு, குறித்த சேனலுக்கு பின்னால் உள்ளவர்களை ஜமாத்களில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும், இதனை 24 மணி நேரத்தில் செய்யவில்லை என்றால், முஹம்மது நபியை பற்றி கார்ட்டூன் வெளியிடப்படும் எனவும் அண்மையில் வர்மா எனப்படும் சுரேந்தர் பேஸ்புக் இல் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, சுரேந்தருக்கு எதிராக முஸ்லிம் முக்கியஸ்தர்கள் சிலர் – பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

இதன் அடிப்படையில் சுரேந்தரை நேற்று செவ்வாய்கிழமை பொலிஸார் கைது செய்தார்கள்.

ஏற்கெனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்டமைக்காகவும், இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Comments