அமிதாப், அபிஷேக் கொரோனாவினால் பாதிப்பு

🕔 July 12, 2020

ந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

‘நான் கொவிட் பரிசோதனை செய்தேன். எனக்கு ‘பொசிட்டிவ்’ ஆக உள்ளது. அதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். குடும்பத்தினர் மற்றும் பணியாளர்களும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், முடிவுகள் காத்திருக்கிறோம்.

கடந்த 10 நாட்களில் என்னுடன் நெருக்கமாக இருந்த அனைவரும் தயவுசெய்து தங்களை சோதித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என, அமிதாப் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

77 வயதுடைய அமிதாப் தற்போது மும்பையிலுள் வைத்தியசாலையில் அனுமதிக்ககப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமிதாப்பின் மகனும் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயியின் கணவருமான நடிகர் அபிஷேக்பச்சனும், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Comments