அம்பாறை மாவட்ட அரசியல் களம்: அச்சுறுத்தல் விடுத்த நஸீர் பணிந்தார்; பைசல் காசிமுக்கு வாக்களிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்

🕔 July 11, 2020

– அஹமட் –

திர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் – அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிமுக்கு விருப்பு வாக்கு ஒன்றை வழங்குமாறு, சக வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தன்னுடைய சொந்த ஊரான அட்டாளைச்சேனைக்குள் வந்து, தனது சக வேட்பளரான முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர்; தற்போது அந்த விடயத்தில் இறங்கி வந்துள்ளதோடு, பைசல் காசிமுக்கு வாக்களிக்குமாறும் தனது ஆதரவாளர்களிடம் வேண்டியுள்ளார்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் – அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

இந்த நிலையில், அதே சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், தன்னுடைய சொந்த ஊரான அட்டாளைச்சேனைக்குள் வந்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என நஸீர் அச்சுறுத்தல் விடுத்து வந்தார்.

நஸீர் மற்றும் பைசல் காசிம் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸின் 06 பேட்பாளர்கள் அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

நஸீருடைய இந்த அச்சுறுத்தல் காரணமாக அவருடைய கட்சிக்குள் கடும் அதிருப்தி எழுந்ததோடு,இது குறித்து மு.காங்கிரஸ் தலைவரிடமும் முறையிடப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில், நஸீரின் எதிர்ப்பினையும் மீறி முன்னாள் அமைச்சர் பைசல் காசிமை அட்டாளைச்சேனைக்கு அழைத்து வந்து பிரசாரக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு, முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர்கள் சிலர் தயாராகினர்.

இதனை அறிந்து கொண்ட நஸீர், ஆரம்பத்தில் அந்தக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று தடுக்க முயற்சித்த போதிலும் அது கைகூடவில்லை.

இதனையடுத்து, பைசல் காசிம் கலந்து கொள்ளும் அட்டாளைச்சேனைக் கூட்டத்தில் தன்னையும் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு நஸீர் கோரிக்கை விடுத்தார்.

இந்தப் பின்னணியில்தான், நேற்று வெள்ளிக்கிழமை இரவு அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவில் குறித்த கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இதன்போதே, பைசல் காசிமின் இலக்கத்துக்கு வாக்களிக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு நஸீர் வேண்டுகோள் விடுத்தார்.

வீடியோ

தொடர்பான செய்திகள்:

01) பைசல் காசிம், தவம் ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டாம்: மறைமுகமாகக் கூறினார் நஸீர்

02) பைசல் காசிம், தவம் அட்டாளைச்சேனைக்குள் வரக் கூடாது; அச்சுறுத்தும் நஸீர்: தேர்தல் களத்தில் குழப்பம்: விசாரிக்க வருகிறார் ஹக்கீம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்