தேசியப்பட்டியல் துரோகம்: அமானிதங்களை அபகரிப்போர் குறித்து, தேவை அவதானம்

🕔 July 11, 2020

– றியாஸ் முகம்மட் –

மூகப் பிரதிநிதித்துவங்களை வெல்ல வேண்டிய, பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுத்துள்ள இன்றைய சூழ்நிலையில், தேசியப்பட்டியலைப் பெற்றுக்கொண்டு துரோகமிழைக்கும் வேட்பாளர்கள் தொடர்பில், புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015ஆண்டு நாடாராளுமன்றத் தேர்தலில், மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட ஒரேயொரு தேசியப்பட்டியல் எம்.பி பதவி, பிற்பட்ட காலத்தில், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த எஸ்.எம்.எம். இஸ்மாயில் என்பவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

அந்தக் கட்சியால் அமானிதமாக அன்னாருக்கு வழங்கப்பட்ட அந்தப் பதவியின் மூலம், முஸ்லிம் குரோதப் போக்காளர்களின் கரங்களைப் பலப்படுத்த, அவர் எடுத்துக்கொண்ட ரகசிய எத்தனங்கள், ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களையே தலைகுனிய வைத்தது.

ராஜபக்ஷக்களின் பின்கதவால் ரகசிய உறவைப் பேணிவந்த இஸ்மாயில், ராஜபக்ஷக்களின் 52 நாள் சட்டவிரோத அரசாங்கத்துக்கு ஆதரவளித்து, அரை அமைச்சுப் பதவியைப் பெற முயன்றார். சமூகத்தை நெருப்பில் தள்ளிவிட்டு, அரை அமைச்சுக்காக, அமானிதத்தையே இவர் அடமானம் வைக்கத் துணிந்ததை, முஸ்லிம் சமூகம் மறப்பதற்கில்லை.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தராகப் பதவி வகித்த மேற்படி தேசிறப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில்; ‘இப்படி பண்பாடு, பக்குவமின்றி நடந்துகொண்டாரே’ என்பது, மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனை நாணிக்கோண வைத்தது.

“இப்படியொரு அற்பத்தனம் இந்தப் மனிதருக்கு இருந்துவிட்டதே. இவரது தனிப்பட்ட நலனுக்காகவா நான் இதைக் கொடுத்தேன்? முஸ்லிம் பெரும்பான்மையின் முகவரி மாவட்டமான அம்பாறையை கௌரவிக்க வழங்கியதை, இவர் களங்கப்படுத்திவிட்டார்” என்ற கவலை ரிஷாட்டிடம் இருந்தாலும், படித்த மனிதர் ஒருவரை இழிவுபடுத்தக் கூடாதென்ற உயர்ந்த நோக்கில், அவர் மௌனமாக இருந்துவிட்டார். லட்சணத் தலைமைக்கு இதுதான் உதாரணம்.

வடபுலத்திலிருந்து அகதியாக வந்த மக்களை அரவணைத்து, ஆறுதலளித்த புத்தளம் மாவட்ட மக்களுக்கு நன்றிக் கடனாகவும், நம்பிக்கைப் பத்திரமாகவும், சகோதரச் சாட்சியாகவும் வழங்கப்பட்ட தேசியப்பட்டியலைத்தான், இரண்டரை வருடங்களின் பின்னர் இவருக்கு வழங்கினார் தலைவர்.

அகதிகளுள் ஒருவராக அன்று அடைக்கலம் தேடிவந்த ரிஷாட் பதியுதீனுக்கு, புத்தளம் மாவட்ட மக்கள் வழங்கிய ஆதரவு, இன்று முஸ்லிம் சமூகத்துக்கு சிறந்த தலைமையைத் தந்துள்ளதை எவரும் மறப்பதற்கில்லை. இந்த மண்ணுக்கான கௌரவமும் அமானிதமும்தான், நவவியிடமிருந்து வாங்கப்பட்டு, பின்னர் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது.

முஸ்லிம்களின் முகவரி அரசியலைப் பாதுகாக்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழங்கிய தேசியப்பட்டியல் எம்.பி பதவியைப் பெற்றுக்கொண்ட இவர், இன்று இன்னொரு கட்சியில் இணைந்து போட்டியிடுகின்றார்.

சமூகத்தின் அமானிதத்தை அபகரித்த துரோகி ஒருவர் எப்படி நாடாமன்றத் தேர்தலில் போட்டியிடலாம்? இந்தக் கேள்விகள், குமுறல்களாகி, அம்பாறை மாவட்டத்தை சூடேற்றியதுடன், முஸ்லிம் அரசியல் களத்தில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments